TYCA Resources – TYCA அறிவரங்கம்

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு வணக்கம்,

காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம் ஆரம்பிக்கப்பட்டதின் மைய நோக்கம் காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்க வேண்டும் மற்றும் தமிழர்தம் வரலாற்றையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறை தமிழ் குழந்தைகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதே.

மொழி என்பது ஒரு இனத்தின் ஆகப்பெரிய அடையாளம்.உலகில் பல்வேறு  இன மக்கள் தத்தம் இனத்தின் மொழி,பண்பாடு,பழக்கவழக்கங்களை தலைமுறை தலைமுறையாகக் காத்து பேணிப் பாதுகாத்து வருகின்றனர்.அப்படி காக்க தவறிய இனம் மானுட வரலாற்றில் காணாமல் போய்விடுகின்றன.உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஓன்றுபட்டு வாழும் மக்கள் சிறப்பான வளர்ச்சிகளைப் பெற்று வரலாறு போற்ற வாழ்கின்றனர்.அப்படி மொழி இன உணர்வால் வெற்றியடைந்த மக்களுக்கு நிகழ்கால உதாரணம் யூத மக்கள்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல ஆட்சியாளர்களால் கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்டாலும் காலம் வரும் வரை காத்திருந்து பொறுமையுடன் ஒற்றுமையாக செயற்பட்டு தனக்கென்று இஸ்ரேல் என்ற புதிய நாட்டையே கட்டமைத்துக் கொண்ட யூத மக்களின் இன உணர்வை உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். அந்த மக்களின் வெற்றிக்கு அடிப்படை காரணம் தலைமுறை தலைமுறையாக அவர்களுக்குள்ளே கடத்தப்பட்ட இன உணர்வும் அடிமைத் தளைகளில் இருந்து விடுபட்டு தம் இனம் ஓங்கி உயர்ந்து பழைய பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற வெற்றித் தாகமும் தான். பழம்பெருமை கொண்ட யூத இனம் இடையில் உலகெங்கும் திரிந்து கொடுங்கோல ஆட்சியாளர்களால் கோடிக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து அவர்களுக்குள்ளே ஊட்டி வளர்க்கப்பட்ட இன மொழி உணர்வினால் பாறை இடுக்கில் விழுந்த விதை பொறுமையாக காத்திருந்து முட்டி மோதி முளைத்து வேர்விட்டு மரமாகி அந்த பாறையையே தகர்ப்பது போல காத்திருந்து தமக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டு, நாட்புறமும் பகைவர்கள் சூழ்ந்து இருந்தாலும் அறிவியலிலும் தொழிற்நுட்பத்திலும் முன்னேறி தம் அறிவாற்றலால் இன்று உலகில் வலிமை பெற்ற நாடாக விளங்குகிறது இஸ்ரேல்.

வரலாற்றில் தமிழினமும் ஆழமான தடங்களைப் பதித்து வந்திருக்கின்ற இனம். தற்போது இந்திய நிலப்பரப்பு என்றழைக்கப்படும் பகுதி மற்றும் அதையும் தாண்டி வடக்கே சிந்து நதிக் கரை வரையிலும் தெற்கே கடல் கொண்ட குமரிக் கண்டம் வரையிலும் பரவிக் கடந்த மக்கள் நம் முன்னோர்கள்.ஐரோப்பியாவிலிருந்து வெள்ளைத் தோல் மக்கள் குடிபெயர்ந்து தமிழரின் முன்னோடி இன மக்களை தெற்கோடு குறுக்கி விட்டனர்.தெற்கிலும் வட மொழி கலந்து தமிழிலிருந்து கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,துளு இன்னபிற மொழிகள் உருவாகவும் அம்மொழிகளை ஒட்டி இனக்குழுக்கள் உருவாகவும் காரணமாகி விட்டது.ஆனாலும் இந்திய தீபகற்பத்தின் ஆதி குடி தமிழினம் என்பதற்கான வரலாற்று சான்றுகள் அவ்வபோது கிடைக்கப் பெறுகின்றன. அப்படி கிடைக்கபெறும் வரலாற்று சான்றுகள்,இலக்கியங்களில் உள்ள தமிழ்,தமிழர் பெருமைகள் மற்றும் தமிழ் தமிழர் சார்ந்த செய்திகள் அவ்வபோது TYCA Resources – TYCA அறிவரங்கம் என்ற இந்த பகுதியில் பகிரப்படும். தமிழர் நலனுக்காய் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு தமிழருக்கு அவர்தம் அறிவே ஆகப் பெரிய பலமாய் இருக்கும் என்று நம்புவதால் இந்த பகுதிக்கு TYCA அறிவரங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

மன்ற நிர்வாகக் குழு.

Last modified on Friday, 28 October 2016 16:03

Recent Post

Get In Touch

Tamil Youth Cultural Association

Kinshasa, Dem. Rep. of Congo

Phone: +243 815 054 333

Email: tycakinshasa@gmail.com