தமிழ் பள்ளி (Tamil School)

தமிழ் நமது தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் இந்திய துணைக் கண்டத்திலிருந்து உதித்த உலகின் செம்மொழிகளில் ஒன்றாகும்.இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போதும் பேச்சு,எழுத்து என உயிர்ப்போடு வழக்கில் இருக்கும் ஆதி மொழியாகும் . சங்ககாலம் தொட்டு இன்றுவரை வாழ்க்கையின் எல்லா நிலையினருக்கும் பயன்படக்கூடிய நல்ல பல நூல்களும், இலக்கியங்களும் தமிழ் மொழியில் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றை நம் பிள்ளைகள் படித்து அறிந்துகொள்ளவும், அதுபோல் எழுதிப் பழகவும் வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தோடு இந்த பள்ளி கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை,நம் பிள்ளைகளுக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்து வருகின்றன. TYCA தமிழ்ப் பள்ளி பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் தன்னார்வல ஆசிரியர்களால் நடத்தப்படும், லாப நோக்கமில்லாத அமைப்பு.

 

எங்கள் நோக்கம்:

 - தமிழரின் குழந்தைகளுக்கு தமிழ் ஆர்வத்தை தூண்டி தமிழை எழுதவும்/படிக்கவும் பயிற்றுவிப்பது

 - குழந்தைகள் தமிழில் சரளமாக பேச பயிற்றுவிப்பது

 - பல்லின சமூகத்தில் நமது தமிழ் அடையாளத்தை தக்க வைக்கவும்,குழந்தைகளுக்கு தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்களை கற்ப்பித்தலுமே ஆகும்.

 

பள்ளி செயற்ப்படும் இடம் /

Venue :  EIS, Avenue de Kasai, Kinshasa, D.R.Congo

Thanks to Mrs. Girija Kannan for the place courtesy.

பயிற்றுவிக்கும் தன்னார்வல ஆசிரியர்கள் :

திருமதி. இலக்குமி சிதம்பரம்

திருமதி. விசாலாட்சி அருணாசலம்

திருமதி. மங்களம் சொக்கலிங்கம்

திரு. இராசாமோகன்

திருமதி. இந்துமதி நந்தகுமார்  

 

பல்வேறு இனங்கள் ஒன்று கூடி வாழும் அயலகச் சூழலிலும் தம் தாய் மொழியினை, அதன் வேர்களை, அதன் தொன்மையை குழந்தைகள் அறிந்திருப்பது இன்றியமையாதது என்ற எண்ணத்துடன் 2013ம் ஆண்டு அப்போதைய தலைவர் திரு. ஜெரால்ட் அவர்களால் தன்னார்வலர்கள் சிலரை கொண்டு தமிழ் மொழிப் பள்ளி அமைத்து குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்து வருகிறோம். அத்துடன் பல்வேறு பண்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். தமிழில் ஆர்வம் கொண்ட அனைவரையும்  தமிழ் மையம் வரவேற்கிறது. பிரதி ஞாயிறு, காலை 9.30 முதல் 11.00 மணி வரை நடைபெறும் இந்த தமிழ் பள்ளியில் தற்பொழுது 18 குழந்தைகள் பயின்று வருகிறார்கள்.

 

Last modified on Friday, 28 October 2016 16:07

Recent Post

Get In Touch

Tamil Youth Cultural Association

Kinshasa, Dem. Rep. of Congo

Phone: +243 815 054 333

Email: tycakinshasa@gmail.com