27 February 2020

எங்களை பற்றி (About us)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு - என்று சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு திரவியத்தோடு, கின்ஷாசாகாங்கோ மக்களாட்சி குடியரசில் வசிக்கும் தமிழர்கள்தங்களது தாய்மொழியாம் தமிழைப் போற்றவும்தம் பிள்ளைகளுக்கு தமிழையும்தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கவும் அனைவரையும் ஓரிடத்தில் இணைக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்.   

200 உறுப்பினர்களின் எண்ணிக்கை கொண்டு சிறப்பாக பணியாற்றி வரும் ஒரு அமைப்பு.  எந்த ஒரு லாப நோக்கும் இல்லாமல் துவங்கிய முதல் வருடத்திலேயே சங்கத்திற்கு தேவையான அனைத்து தளவாட சாமான்கள் வாங்குவதற்கு 10,000 டாலர் மதிப்பில் நன்கொடை மூலமாக அனைத்து தமிழர்களின் முழு ஒத்துழைப்போடு துவங்கப்பட்டது.

01 2011ம் வருடம், இந்திய நாட்டை சேர்ந்த 77 வயதுடைய ஒரு இந்தியர், கேரளா மாநிலம் சார்ந்தவர் கின்ஷாசாவில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரை பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்று இந்தியாவில் இருந்து அவரின் மகள் கொடுத்த ஒரு தொலைபேசியை வைத்து ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி சென்றபொழுது கண்டுபிடித்தபின்னர், மருத்துவர்களிடம் பேசியதன் மூலம் அவர் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், சிகிச்சைக்கும் சிகிச்சை செலவுக்கும் பொறுப்பேற்பது யார் என்ற நிலை வந்த நிலையில், அதே தகவலை ஊரில் இருக்கும் உறவினர்களுக்கு தெரிவித்த பின் அவருக்கு காப்பீடு இருப்பதாக சொன்னதன் அடிப்படையில் விமானம் மூலம் மருத்துவ சிகிச்சைக்கு தென்னாப்பிரிக்கா செல்ல முயன்ற பொழுது, காப்பீடு பத்திரத்தை படித்த பொழுது அந்த காப்பீடு காங்கோவிற்கு இல்லை என்று தெளிவாக இருந்ததன் மூலம் எதுவுமே செய்ய இயலாத நிலையில், அவரது உயிரை காப்பாற்ற இயலா நிலையை உணர்ந்து, ஒரு அமைப்பாக இருந்து இருந்தால் இப்படி அவசர காலத்தில் உதவி செய்ய உதவுமே என்ற எண்ணத்தின் உதயமே இந்த அமைப்பு.

02 ஆங்காங்கே கின்ஷாசா வாழ் தமிழர்கள் ஒரு சிறு சிறு குழுமங்களாக தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டு இருந்ததை ஒரு பொது சேவைக்காக ஓரிடத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி, சுகங்களையும், துக்கங்களையும் பகிர்ந்துகொள்வதோடு, புதிய உறுப்பினர்களை அரவணைத்து, மொழி மற்றும் கலாச்சாரம் சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தி ஒரு குடும்பமாக செயலாற்றி வருகிறது.

03 இந்த மன்றத்தின் உறுப்பினர்கள் 99 சதவிகிதத்திற்கும் மேலானோர் தங்களது அலுவலக பணிக்கு செல்வோரே.  அவர்களின் பணிச்சுமைக்கும் அப்பால், நேரம் ஒதுக்கி பல்வேறு சமூக சேவை செய்து வரும் பட்சத்தில் அவற்றில் சில:- இங்கே நடக்கும் பாதுகாப்பு, உள்நாட்டு சட்ட மாறுதல்களை அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்திக்கொண்டு இருக்கிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் இங்கே இருக்கும் மக்களின் திறமைகளை வெளிப்படுத்த மேடை நிகழ்ச்சிகள் நடடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தமிழ் சாரல் என்ற ஒரு மாத பத்திரிகை எழுதி, தொகுத்து அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. குழந்தைகளுக்கான தமிழ் பள்ளி துவங்கி இலவசமாக ஒவ்வொரு வாரமும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழை எழுத, படிக்க கற்று தருகிறார்கள். விளையாட்டு ஆர்வலர்களுக்காக விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பொருட்டு பயிற்ச்சியும், போட்டிகளும் நடத்தப்படுகிறது.

04 இந்த சமூக சேவை அமைப்பு தொடர்ந்து ஆறாண்டுகள் ஆகி இருக்கிறது.. இந்த ஆறு ஆண்டுகள், சேவை ஒன்றை மட்டுமே நோக்காக கொண்டு செயலாற்றி வருகிறது..  

 

TYCA Office Bearers 2018 - 2019

Soundarajan

President, TYCA

Bhuvanesh

Vice President, TYCA

Suresh

Secretary, TYCA

Shanmugavel

Treasurer, TYCA

Vengatesan

Cultural Secretary, TYCA

Sangeetha Ashokan

Dy. Cultural Secretary, TYCA

Gayathri Marimuthu

Vice Secretary, TYCA

Vaithi

Joint Treasurer, TYCA

Recent Post

Get In Touch

Tamil Youth Cultural Association

Kinshasa, Dem. Rep. of Congo

Phone: +243 815 054 333

Email: tycakinshasa@gmail.com